ஆசியக் கோப்பை டி-20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

அபுதாபியில் செப்டம்பர் 9 முதல் 28 வரை நடைபெற உள்ள ஆசியக் கோப்பை டி-20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணியைத் தேர்வு செய்யும் கூட்டம், தலைமைப் பயிற்சியாளர் கவுதம் காம்பிர் மற்றும் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகார்கர் தலைமையில் நடைபெற்றது. அதன் பின்னர், சூர்யகுமார் யாதவ் கேப்டனாகவும், சுப்மன் கில் துணைக் கேப்டனாகவும் உள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டது.

அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் விவரம்:

  1. சூர்யகுமார் யாதவ் (கேப்டன்)
  2. சுப்மன் கில் (துணைக் கேப்டன்)
  3. அபிஷேக் ஷர்மா
  4. திலக் வர்மா
  5. ஹர்திக் பாண்ட்யா
  6. ஷிவம் துபே
  7. அக்சர் படேல்
  8. ஜித்தேஷ் ஷர்மா
  9. ஜஸ்பிரித் பும்ரா
  10. அர்ஷ்தீப் சிங்
  11. வருண் சக்கரவர்த்தி
  12. குல்தீப் யாதவ்
  13. சஞ்சு சாம்சன்
  14. ஹர்ஷித் ராணா
  15. ரிங்கு சிங்

Exit mobile version