துபாய்: சர்வதேச கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று அமீரகத்தில் துவங்குகிறது. செப்டம்பர் 28ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இத்தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன.
பிரிவு அணிகள்:
ஏ பிரிவு: இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன்
பி பிரிவு: வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், ஹாங்காங்
துபாய் மற்றும் அபுதாபி மைதானங்களில் போட்டிகள் நடைபெறும் நிலையில், ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு அணிகள் சூப்பர் ஃபோர் சுற்றுக்கு முன்னேறும். அங்கு முதலிரண்டு இடங்களில் வரும் அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெறுகின்றன.
முக்கிய போட்டிகள் :
இன்று தொடங்கும் லீக் சுற்று ஆட்டங்கள் வரும் 19ஆம் தேதி வரை துபாயில் நடைபெறும்.
வரும் 10ஆம் தேதி இந்திய அணி, ஐக்கிய அரபு அமீரக அணியை எதிர்கொள்ளும்.
மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா – பாகிஸ்தான் மோதல் செப்டம்பர் 14ஆம் தேதி துபாயில் நடைபெறவுள்ளது.
அதனைத் தொடர்ந்து இந்தியா – ஓமன் போட்டி செப்டம்பர் 19ஆம் தேதி நடைபெறும்.
இந்தியா – பாகிஸ்தான் அணிகள் லீக் சுற்றிலும், சூப்பர் ஃபோர் சுற்றிலும், சாத்தியமான இறுதிப்போட்டியிலும் மும்முறை மோத வாய்ப்பு உள்ளதால், ஆசியக் கோப்பை மீது ரசிகர்களிடையே ஏக எதிர்பார்ப்பு நிலவுகிறது.
செப்டம்பர் 20 முதல் 26ஆம் தேதி வரை சூப்பர் ஃபோர் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. இறுதிப் போட்டி செப்டம்பர் 28ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.
மொத்தத்தில், இந்த மாதம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு உண்மையான சரவெடி காத்திருக்கிறது.