செம்மொழிக்கும் கருணாநிதிக்கும் என்ன சம்பந்தம். தமிழ் செம்மொழியாக இருந்ததா இல்லை அவர் சொன்னதால் செம்மொழியாக ஆனதா. -சீமான் பேட்டி
ஸ்ரீகாந்தும் , கிருஷ்ணாவும் தான் குற்றவாளிகளா? அப்பாவிகள். இவர்கள் கைது செய்யப்பட்டால் போதைப்பொருள் நிறுத்தப்படுமா.
கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வந்தடைந்தார் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது:
தமிழர்களின் அடிப்படை உரிமை என்று சொல்வதை விட உயிர் உரிமை என்று தான் சொல்ல வேண்டும் ஒவ்வொரு தேசிய இனங்களின் உயிர் உடமை அவர்களின் மொழி. தமிழ்நாடு என்ற பெயரை தவிர வேற ஏதாவது அடையாளம் உள்ளதா. அடையாளம் இல்லை என்றால் அது எப்படி தமிழ்நாடு அல்லது தமிழர் நாடாகும். இறைவனுக்கு முன்பு ஒரு இனம் தன் தாய்மொழியில் இறைவனுக்கு வழிபட முடியாது, படிக்க முடியாது, வழக்காட முடியாது என்கிற நிலை பெற்றிருந்தால் அந்த இனம் உலகின் மிகக் கீழான அடிமை இனம் எனப் பொருள். ஒரு தேசிய இனம் காலடியில் எப்படி சுருங்கியது. தமிழ் கடவுள் முருகன் என்று சொல்லிவிட்டு தமிழில் வழிபாடு நடத்துவதற்கு என்ன பிரச்சனை. தமிழிலும் என்கிறீர்கள் போனா போகிறது என்று, நான் என்ன ஐயப்பன் கோவிலிலும் திருப்பதி கோவிலிலும் தமிழில் சரி செய்யவா கேட்கிறோம். கடவுளை கடல் கொடுத்த இனம், இறைவனை இரவல் கொடுத்த இனம். பிச்சைக்காரனுக்கு பிச்சை போடுவதைப் போலவா இது, எங்கள் இனம்.
தமிழ் கடவுள் கருணாநிதி என அன்பில் மகேஷ் கூறியது குறித்த கேள்விக்கு:
இங்கு உள்ள நூலகத்திற்கு பாண்டிச்சேரி தேவர் பெயரை வைக்க முடியாதா, ஜல்லிக்கட்டுக்கும் கருணாநிதிக்கும் என்ன சம்பந்தம் முக்கையா தேவர் பெயரை வைக்கக்கூடாதா. மதுரை விமான நிலையத்திற்கு பாண்டிய நெடுஞ்செழியன் பெயரை வைக்க கூடாதா. செம்மொழிக்கும் கருணாநிதிக்கும் என்ன சம்பந்தம். தமிழ் செம்மொழியாக இருந்ததா இல்லை அவர் சொன்னதால் செம்மொழியாக ஆனதா. நடராஜன் இறந்த நாளும், வள்ளுவர் பிறந்த நாளோ தான் செம்மொழி நாளாக இருக்க வேண்டும். கீழடியில் இரண்டு ஏக்கரை மட்டும் தோன்றி விட்டு மூடியது ஏன். அதற்கு மேல் தோண்டினால் என்ன. இதைத் தோண்டினால் தமிழர்களின் தொன்மம் தெரிந்துவிடும். அவன் இந்திய நாகரிகம் என்கிறான், நீ திராவிட நாகரிகம் என்கிறாய் ஏன் தமிழர் நாகரிகம் என்று சொல்ல என்ன வலிக்கிறது.
வந்தவன் சென்றவன் எல்லாம் நாட்டை ஆண்டு விட்டு இரண்டு ஏக்கரில் கல்லறை வைத்திருக்கிறீர்கள். நாட்டுக்காக போராடியவர்களுக்கு ஏதாவது அடையாளம் உள்ளதா. திட்டமிட்டு மறைக்கிறார்கள் என்று தெரிகிறது. உயிர் போகும் என்றாகிவிட்டால் தன்மானத்துடன் போகட்டும்.
கள்ளச்சாராயம் குடித்து இறந்தவனுக்கு பத்து லட்சம், சாராய ஆலை வைத்து காய்ச்சி விற்கும் முதலாளி எப்படி கள்ளை மது என்று சொல்லலாம். இங்கு மட்டும் எப்படி கள் மதுவானது. கள் எனது தேசிய அடையாளம்.
ஸ்ரீகாந்த் தொடர்ந்து நடிகர் கிருஷ்ணா கைது செய்யப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு:
அவர்கள் இருவரும் தான் விட்டார்களா வேறு யாரும் பயன்படுத்தவில்லையா. அதானி துறைமுகத்தில் 20 லட்சம் கோடிக்கு மேல் போதைப்பொருள் வந்திருந்தது. அதை என்ன செய்தார்கள் என்று நான் தான் கேள்வி கேட்டேன். பயன்படுத்தியவரை கைது செய்தீர்கள், விற்றவர் எங்கே. வீரப்பன் மரங்களை வெட்டி சொந்தங்களை விற்றதாக சுற்றும் சாட்டினார்கள் அதை வாங்கினவன் என்ன ஆனான். ஸ்ரீகாந்தும் , கிருஷ்ணாவும் தான் குற்றவாளிகளா? அப்பாவிகள். இவர்கள் கைது செய்யப்பட்டால் போதைப்பொருள் நிறுத்தப்படுமா. ஸ்ரீகாந்த்திற்கு விற்றவர் அதிமுக என்பதால் நீங்கள் திருப்புகிறீர்கள். திமுகவை சேர்ந்தவருக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லையா. இரண்டு அப்பாவிகள் பலியாகி விட்டார்கள் அவ்வளவுதான். பள்ளிகளில் கஞ்சா மிட்டாய் வைத்திருக்கிறார்கள் அதை ஆசிரியர்கள் என்னிடம் சொல்கிறார்கள். சாராயம் விற்கும் அரசு கொக்கை விற்றவரை கைது செய்கிறது. குடிக்கும் போது வண்டியில் போகலாம், குடித்துவிட்டு வண்டியில் வரக்கூடாது கைது செய்து விடுவார்கள். அப்படி என்றால் ஒயின் ஷாப் வாசலில் ஆம்புலன்ஸ் வைத்து ஏற்றி அனுப்பி வையுங்கள் குடித்துவிட்டு அதில் ஏற்றி வீட்டில் இறக்குங்கள்.
சமஸ்கிருதம் இறந்துவிட்டது. அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் உயிர்பிக்க போராடுகிறார்கள். எங்கள் தாய்மொழி செத்துக்கொண்டே இருக்கிறது அதை உயிர்பிக்க அதிகாரத்தை பிடிக்க துடிக்கிறோம்.
எங்களை புறக்கணிக்கிறார்கள் என்று அரசே சொல்லும், நிதி வராததால் வெள்ள நிவாரணம் ஆசிரியர்களுக்கு சங்கம் சம்பளம் வழங்கவில்லை என்று அரசு சொல்லும்.அரசு மத்திய அரசு நிதி தரவில்லை என குறை சொல்லும் ஆனால் அவர்களுடன் இணக்கமாக இருந்து நாடகத்தை நடத்தும். அவர்களின் நம்மை வைத்திருப்பது நம் நிலத்திற்கும், வரிக்கும் தான்.
பாமக கட்சி பிரச்சனை குறித்த கேள்விக்கு :
சின்னையா பெரியையாவிற்கும் இருக்கும் கருத்து வேறுபாடு கட்சி பிரச்சனை அது சரியாகும் சரி செய்யணும். நானும் எங்கள் இரண்டு ஐயாவை சந்திப்பேன். அந்தக் காலத்தில் இருந்ததால் எனக்கும் பாசம் அதிகம். பாமக தேர்தல் வெற்றியோ, அரசியல் லாபத்திற்காக உருவாக்கப்பட்டது அல்ல தமிழ் சமூகத்திற்காக, குடிமகனின் வேலை வாய்ப்பு, கல்விக்காக உருவாக்கப்பட்டது. எந்தக் கட்சியில் கருத்து முரண் இல்லை. அது சரியாகும்.
கூட்டணி குறித்த கேள்விக்கு:
அவர்கள் ஒன்றாக நிற்க வேண்டும் என்று சொல்கிறார்கள். அதனால் தான் நான் ஒன்னா நிற்கிறேன். இவர்கள் திமுகவை ஒழிக்க வேண்டும் என்கிறார்கள், அவர்கள் பாஜகவை வளர விடக்கூடாது என்கிறார்கள். இருவருமே மக்கள் நலன் சார்ந்து இல்லை. என்னுடைய கனவு இருவரையும் ஒழிக்க வேண்டும் என்பதுதான் அதனால்தான் நீண்ட நாட்களாக ஒன்றாக நிற்கிறேன் என கூறினார்.