வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் ஆண்ட்ரே ரஸ்ஸல், சொந்த மண்ணில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.
2010-ம் ஆண்டு சர்வதேச அரங்கில் அறிமுகமான ரஸ்ஸல், ஆரம்பத்தில் பவுலிங் ஆல்ரவுண்டராக விளங்கினார். ஆனால் தனது கடின உழைப்பாலும் தாக்கத்தால், பின்னர் உலக அளவில் மிகவும் பயங்கரமான பவர் ஹிட்டராக உருவெடுத்தார்.
2012 மற்றும் 2016-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை சாம்பியன் அணியில் முக்கியமான பங்களிப்பைச் செய்திருந்த ரஸ்ஸல், 86 டி20 போட்டிகளில் 96 சிக்சர்கள் அடித்துள்ளார்.
2016-ல் இந்தியாவில் நடந்த உலக கோப்பை அரையிறுதியில் 240 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடி, இந்தியாவை தோற்கடிக்க முக்கியமான பாத்திரமாக இருந்தவர் ரஸ்ஸல் என்பது குறிப்பிடத்தக்கது.
கடைசி போட்டியில் 4 சிக்சர்கள்!
ஆஸ்திரேலியாவுடன் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், இரண்டாவது போட்டியில் தனது கடைசி சர்வதேச போட்டியை ஆடிய ரஸ்ஸல், 7வது வீரராக களமிறங்கி, 4 சிக்சர்கள், 2 பவுண்டரிகள் அடித்து 172 ரன்கள் என்ற மதிப்புள்ள ஸ்கோரை அமைக்க உதவினார். ஆனால், ஜோஸ் இங்கிலீஸ் (78 ரன்கள்) வெளிப்படுத்திய அதிரடி ஆட்டத்தால் ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது. தொடரில் 2-0 என அவர்கள் முன்னிலை பெற்றுள்ளன
பாராட்டு விழா!
போட்டி தொடங்குவதற்கு முன், இரு அணியினரும் ரஸ்ஸலுக்கு Guard of Honour அளித்து மரியாதை செலுத்தினர். ரசிகர்கள் எழுச்சியுடன் அவரை வரவேற்றனர்.
போட்டிக்குப் பிறகு பேசிய ரஸ்ஸல்,
“சபீனா பார்க்கில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது மிகப் பெருமை. என் மக்களின் முன் இறுதி போட்டியை ஆடியதில் மகிழ்ச்சி. வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டுக்கு நன்றி. என்னை ஆதரித்த அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.”
என்று உணர்ச்சியுடன் தெரிவித்தார்.
ஆண்ட்ரே ரஸ்ஸலின் ஒளிரும் கிரிக்கெட் பயணத்திற்கு உலகம் முழுக்குள்ள ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.