பீஹார் சட்டசபை தேர்தலில் போட்டியிட போவதாக கூறி மாம்பழம் சின்னத்தை அன்புமணி தரப்புக்கே வழங்கப்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்தார்.
அவரின் பேட்டி: “பொய் சொல்லும் வேஷம் கலைந்துவிட்டது. சிலர் போலி ஆவணங்கள் மூலம் மாம்பழ சின்னத்தை பெற்றுள்ளனர். நான் 46 வருடங்களாக ஓய்வின்றி உழைத்திருக்கிறேன், ஆனால் இன்றைய சூழலில் சிலர் பாமக என்ற பெயரில் போலியாக செயல்படுகிறார்கள். அவர்கள் வேஷம் நிச்சயமாக கலைந்து விடும்,” என அவர் கூறினார்.
மேலும், பீஹாரில் அன்புமணி தரப்பினர் போட்டியிடுவதாகவும், மாம்பழ சின்னம் பெற்றுவிட்டதாகவும் கூறப்படுவதாக குறிப்பிடப்பட்ட போது, ராமதாஸ், “தென் கொரியா, ஜப்பான், மொரிஷியஸ் போன்ற நாடுகளிலும் அன்புமணி தரப்பினர் மாம்பழ சின்னத்தில் போட்டியிடும் திட்டம் உள்ளனர்” என்று விமர்சித்தார்.