“பாஜகவோடு கூட்டணி ? கனவில் கூட இல்லை!” – வைகோ உறுதி

சென்னை : பாஜக மற்றும் அதிமுகவுடன் மதிமுக பேசுவதாக பரவிய தகவல் குறித்து கடுமையாக மறுப்பு தெரிவித்துள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “அது முழுமையான அபாண்டம்” என திட்டவட்டமாக கூறியுள்ளார்.

சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் இல்லத்தில் இன்று வைகோ மற்றும் துரை வைகோ நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். சந்திப்பு முடிந்தபின், செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “எந்த சூழ்நிலையிலும் பாஜகவோடு கூட்டணி வைக்க மாட்டேன். மதிமுகவே தன்னிச்சையான கட்சி” என வலியுறுத்தினார்.

மேலும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் வெளியேறியதைப்பற்றி பேசும் போது, “அவரிடம் வேறு வழியே இல்லை என்பதால் அந்த முடிவை எடுத்துள்ளார்” என விமர்சித்தார்.

Exit mobile version