5 ஆண்டுகளில் 14,300% லாபம் கொடுத்த ஸ்மால் கேப் பங்கு – 8 இலவச பங்குகள்!

இன்று ஆல்கோகுவான்ட் ஃபின்டெக் (Algoquant Fintech Ltd) பங்குகள் 19% உயர்ந்து ரூ.91.70 என்ற புதிய உச்சத்தை எட்டின. இதற்குக் காரணமாக, நிறுவனம் அறிவித்த 8:1 போனஸ் பங்கு வெளியீடு மற்றும் 2:1 பங்கு பிரிப்பு நடவடிக்கைகளுக்கான பதிவு தேதி நெருங்கி வந்திருப்பதே குறிப்பிடத்தக்கது.

பங்குச் சந்தையில் ஏற்பட்ட பொது உயர்வும், இந்த நிறுவன பங்குகளுக்கு கூடுதல் வலுசேர்த்தது. இதனால் பங்கு விலை BSE இல் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்தது.

8:1 போனஸ் பங்கு

ஆல்கோகுவான்ட் ஃபின்டெக் நிறுவனம், ஒவ்வொரு 1 ஈக்விட்டி பங்குக்கும் 8 புதிய முழுமையாக செலுத்தப்பட்ட போனஸ் பங்குகளை வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது.
“ஆகஸ்ட் 18, 2025 பதிவு தேதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அன்றைய தேதியிலுள்ள பங்கு உரிமையாளர்களுக்கு, ஒவ்வொரு 1 பங்கிற்கும் ரூ.1 முகமதிப்பில் 8 புதிய போனஸ் பங்குகள் வழங்கப்படும்” என்று நிறுவனம் பங்குச் சந்தை தாக்கலில் தெரிவித்துள்ளது.

2:1 பங்கு பிரிப்பு

மேலும், நிறுவனம் தனது பங்குகளைப் பிரிக்கவும் முடிவு செய்துள்ளது. அதன்படி, ஒவ்வொரு ரூ.2 முகமதிப்புள்ள பங்கும், ரூ.1 முகமதிப்பில் 2 பங்குகளாகப் பிரிக்கப்படும். இந்த பங்குப் பிரிப்பிற்கான பதிவு தேதியும் ஆகஸ்ட் 18, 2025 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புழக்கத்தில் உள்ள பங்குகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகும்.

பங்கு விலை நிலவரம்

ஆல்கோகுவான்ட் ஃபின்டெக் பங்கு நீண்டகால அடிப்படையில் ஒரு மல்டிபேக்கர் பங்காக உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் இந்நிறுவன பங்கு விலை 14,300% உயர்வை கண்டுள்ளது. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 64% உயர்ந்துள்ளது.

2025 ஏப்ரலில் ரூ.4 ஆக இருந்த 52 வார குறைந்த விலையிலிருந்து, பங்கு தற்போது 108% உயர்ந்துள்ளது. சமீபத்திய வர்த்தக நடவடிக்கைகளில், கடந்த 5 அமர்வுகளில் 8.03% உயர்ந்துள்ளது. கடந்த மாதத்தில் 15.21% மற்றும் கடந்த 6 மாதங்களில் 58.50% உயர்வையும் பதிவு செய்துள்ளது.

இக்கட்டுரை எழுதும் நேரத்தில், ஆல்கோகுவான்ட் ஃபின்டெக் (முன்னாள் ஹிந்துஸ்தான் எவரெஸ்ட் டூல்ஸ் லிமிடெட்) பங்கு 10.05% உயர்ந்து ரூ.84.85 ஆக வர்த்தகமாகி வந்தது.

நிறுவனம் குறித்து

1962 இல் நிறுவப்பட்ட ஆல்கோகுவான்ட் ஃபின்டெக் லிமிடெட், புது தில்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. முன்பு ஹிந்துஸ்தான் எவரெஸ்ட் டூல்ஸ் லிமிடெட் என அழைக்கப்பட்ட இந்த நிறுவனம், நவம்பர் 2021 இல் ஆல்கோகுவான்ட் ஃபின்டெக் லிமிடெட் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தற்போது இது ஆல்கோகுவான்ட் இன்வெஸ்ட்மென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் துணை நிறுவனம் ஆக செயல்பட்டு வருகிறது.

Exit mobile version