உலக முன்னணி விமான உற்பத்தி நிறுவனங்களின் கலந்து கொள்ளும் துபாய் விமான கண்காட்சி இன்று துவங்குகிறது. இரண்டு வருடத்திற்கு ஒருமுறை நடக்கும் இந்த கண்காட்சியில் 1500 நிறுவனங்கள் மற்றும் 1,48,000 பார்வையாளர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்த ஆண்டின் கண்காட்சியில் பம்பார்டியர், டசால்ட், ஏர்பஸ், லாக்ஹீட் மார்ட்டின், எம்பிரேர் போன்ற உலகளாவிய முன்னணி நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்த உள்ளனர்.
இந்திய பங்கேற்பு :
இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தி ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட், DRDO, பாரத் போர்ஜ், பிரம்மோஸ், டெக் மஹிந்திரா மற்றும் பல தனியார் நிறுவனங்கள் காட்சியில் பங்கேற்கின்றன. 15 புதிய ஸ்டார்ட்-அப் நிறுவனங்களும் தங்கள் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துகின்றன.
மேலும், இந்திய விமானப்படை சார்பில் சூரியகிரண் ஏரோபேட்டிக் அணி சாகச நிகழ்ச்சி நடத்துவதோடு, தேஜஸ் போர் விமானங்களும் காட்சிப்படுத்தப்பட உள்ளன.
இந்தியாவை மத்திய அமைச்சர் சஞ்சய் சேத் பிரதிநிதித்துவம் செய்கிறார். இவர், உலகின் 50 நாடுகளின் நிறுவன பிரதிநிதர்களுடன் பாதுகாப்பு, தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் உற்பத்தி தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்துவர்.
இந்த கண்காட்சி இந்தியாவின் விமான மற்றும் பாதுகாப்பு துறைகளில் முன்னேற்றத்தை உலகுக்கு காண்பிக்கும் முக்கிய வாய்ப்பு என வல்லுநர்கள் கூறுகின்றனர்.
