பெரம்பலூர்: “வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி 210 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்” என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார் இபிஎஸ். அவர் கூறியதாவது :
“திமுக 200 இடங்களில் வெற்றி பெறும் என கனவு காணலாம். ஆனால் அந்த கனவுகள் முடிந்துவிடும். எங்கள் கூட்டணி தான் 210 இடங்களில் வெற்றி பெறும்.”
மேலும், மாநிலத்தில் ஏழை மக்களுக்கான திட்டங்களை திமுக அரசு முறையாக செயல்படுத்தவில்லை எனக் குற்றம்சாட்டிய அவர், 100 நாள் வேலைத்திட்டத்தின் நிதி விடுவிப்பு தொடர்பாகவும் விளக்கினார்.
“திமுக அரசு மத்திய அரசை குற்றம்சாட்டுகிறது. ஆனால் மத்திய அரசு சொல்வது என்னவென்றால், இந்தத் திட்டம் தொடர்பான முறையான கணக்குகளை தமிழ்நாடு அரசு சமர்ப்பிக்கவில்லை. அதனால்தான் நிதி தாமதமாக வந்தது. உரிய கணக்கீடு இருந்திருந்தால், பணமும் நேரத்தில் வந்திருக்கும்.”
திமுக அரசு ஊழலில் முழுமையாக மூழ்கியுள்ளது என்றும் அவர் விமர்சித்தார்:
“காற்றில் கூட ஊழல் செய்யும் ஆட்சிதான் திமுக அரசு. மக்களுக்கு நன்மை கிடைக்காமல், வழிகேட்ட தகவல்களை வழங்கும் அரசு இது. உண்மையை பேசாத அதிகாரிகளுக்கு, அதிமுக ஆட்சியில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.”
அமித்ஷாவை சந்தித்தது குறித்த விமர்சனத்துக்கும் இபிஎஸ் பதிலளித்தார்:
“அமித்ஷா என்ன பாகிஸ்தானில் இருக்கிறார்? உள்துறை அமைச்சரிடம் பிரச்சனைகளை எடுத்துச் செல்லுவதில் என்ன தவறு? ஜாதிவாரி கணக்கெடுப்பு, வேலை வாய்ப்பு திட்ட நிதி — இவை அனைத்தும் எங்கள் முயற்சியின் பலன்தான்.”
திமுக அரசு மக்களை மிரட்டிப் போட்டியிலே வெற்றிபெற முயல்கிறது என்றும், உரிமைத்தொகை நிறுத்தப்படும் என்ற எச்சரிக்கைகள் ஜனநாயக எதிரிகளின் செயல் எனவும் இபிஎஸ் குற்றம் சாட்டினார்.
“காற்றில் கூட ஊழல் செய்யும் ஆட்சிதான் திமுக அரசு. மக்களுக்கு நன்மை கிடைக்காமல், வழிகேட்ட தகவல்களை வழங்கும் அரசு இது. உண்மையை பேசாத அதிகாரிகளுக்கு, அதிமுக ஆட்சியில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.”
அமித்ஷாவை சந்தித்தது குறித்த விமர்சனத்துக்கும் இபிஎஸ் பதிலளித்தார்:
திமுக அரசு மக்களை மிரட்டிப் போட்டியிலே வெற்றிபெற முயல்கிறது என்றும், உரிமைத்தொகை நிறுத்தப்படும் என்ற எச்சரிக்கைகள் ஜனநாயக எதிரிகளின் செயல் எனவும் இபிஎஸ் குற்றம் சாட்டினார்.
“உறுப்பினர் ஆகாதவர்களுக்கு உரிமைத்தொகை நிறுத்துவதாக திமுக கூறுகிறது. அவர்கள் நிறுத்தினால், நாங்கள் வழங்குவோம். பயப்பட வேண்டாம்.”
திமுக–பாஜக கூட்டணி தவறில்லை என்றால், அதிமுக–பாஜக கூட்டணி எப்படி தவறு ஆகும் என கேள்வி எழுப்பிய அவர், “மக்கள் பக்கம் நிற்கும், பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் ஆட்சி அமைப்பது அதிமுக தான்” என்று வலியுறுத்தினார்.