“தன் மீது விடுக்கப்பட்ட பாலியல் குற்றச்சாட்டை சட்டப்படி எதிர்கொள்வேன்” – நடிகர் விஜய் சேதுபதி விளக்கம் !


தன் மீது பதிவான பாலியல் குற்றச்சாட்டை சட்டப்படி எதிர்கொள்வதாக நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்திருக்கிறார்.

தமிழ் திரைப்பட உலகில் முக்கிய நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. ‘தென்மேற்குப் பருவக்காற்று’ படம் மூலம் அறிமுகமாகி, ‘பீட்சா’, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘96’, ‘விக்ரம் வேதா’, ‘மகாராஜா’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான ‘தலைவன் தலைவி’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், சமூக ஊடகங்களில் ரம்யா மோகன் என்ற பெண் ஒருவர், விஜய் சேதுபதியை மையமாகக் கொண்ட பாலியல் குற்றச்சாட்டுகளை எழுப்பியிருந்தார். நடிகைகள் தேர்வின்போது கோலிவுட்டில் பாலியல் தொல்லைகள் நடைபெறுவதாக அவர் தனது எக்ஸ் தலத்தில் குற்றம் சாட்டியிருந்தார்.

விஜய் சேதுபதியையும் இது தொடர்பாகக் குறிப்பிடும் அவர், ஒரு பெண் நடிகை தற்போது மறுவாழ்வு மையத்தில் இருப்பதாகவும், அவரை தனது கேரவனுக்கு வரச் சொல்வதற்காக ₹2 லட்சம் கொடுத்ததாகவும், மேலும் பாலியல் தேவைகளுக்காக ₹50,000 வழங்கியதாகவும் பதிவில் கூறியிருந்தார்.

இது சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்ட நிலையில், அந்தப் பதிவு பின்னர் நீக்கப்பட்டது. இதற்குடன் ரம்யா மோகன் தனது எக்ஸ் கணக்கையும் முடக்கியுள்ளார்.

இந்த விவகாரத்தில் தனது நோக்கத்தை தெளிவுபடுத்தியுள்ள நடிகர் விஜய் சேதுபதி, “இது தொடர்பான அனைத்து குற்றச்சாட்டுகளையும் நான் சட்டப்படி முறையாக எதிர்கொள்வேன்,” எனக் கூறியுள்ளார்.

Exit mobile version