ரேஸிங் மூலம் இந்திய சினிமாவை உலக அளவில் பெருமைப்படுத்தும் நடிகர் அஜித் !

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார், நடிப்பைத் தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் துறையில் தனது சாதனைகளை தொடர்ந்து கொண்டு வருகிறார்.

இந்தாண்டு அவர் நடித்த குட் பேட் அக்லி திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், தற்போது சினிமாவிலிருந்து சிறிய இடைவெளி எடுத்து, கார் ரேஸிங் தொடர்பான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

கடந்த ஆண்டு அவர் தொடங்கிய ‘Ajith Kumar Racing’ நிறுவனம், துபாய், பெல்ஜியம் உள்ளிட்ட பல நாடுகளில் நடைபெற்ற பந்தயங்களில் பங்கேற்று வெற்றிகளை பெற்றுள்ளது. தற்போது ஜெர்மனியில் நடைபெறும் கார் ரேஸிலும் அஜித் பங்கேற்றுள்ளார்.

மேலும், 2025 ஆம் ஆண்டுக்கான FIA 24H Endurance Series-இல் போர்ஷ் கார்களுடன் Ajith Kumar Racing அணி பங்கேற்கிறது. இதில் துபாயின் Michelin 24H Dubai போட்டியுடனும், முழு ஐரோப்பிய சீசனிலும் பங்கேற்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதோடு, இந்திய சினிமாவை உலகம் முழுவதும் பெருமைப்படுத்தும் வகையில், மோட்டார் ஸ்போர்ட் மற்றும் பொழுதுபோக்கை ஒருங்கிணைக்கும் புதிய லோகோ ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த லோகோவில், கிளாப் போர்டில் 1913 முதல் என குறிப்பிடப்பட்டிருப்பது இந்திய சினிமாவின் துவக்கத்தை குறிக்கிறது. மேலும், “இந்திய சினிமா” என்ற வார்த்தையுடன், உலகில் அதிக படங்களை 20 மொழிகளில் தயாரிக்கும் பாரம்பரியத்தை வலியுறுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த லோகோ, Ajith Kumar Racing அணியின் ரேஸ் கார்கள் மற்றும் டிரைவர் சூட்களில் இடம்பெறும் என அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா மற்றும் அஜித் குமார் ரேஸிங் அதிகாரப்பூர்வ பக்கங்கள் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version