அமைச்சர் ஐ.பெரியசாமி மீது பதிவு செய்யப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கில், அவருக்கு உயர்நீதிமன்றம் வழங்கிய விடுதலை உத்தரவை ரத்து செய்ததை உச்சநீதிமன்றம் இடைக்காலமாகத் தடை செய்துள்ளது.
2006 முதல் 2010 வரை அமைச்சராக இருந்த காலத்தில், வருமானத்திற்கு அதிகமாக ரூ.2 கோடி 1 லட்சத்து 35 ஆயிரம் மதிப்பிலான சொத்து குவித்ததாக ஐ.பெரியசாமி, அவரது மனைவி உள்பட 4 பேருக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இந்த வழக்கில் விசாரணை நடத்திய திண்டுக்கல் சிறப்பு நீதிமன்றம், குற்றச்சாட்டில் போதுமான ஆதாரம் இல்லை எனக் கூறி, ஐ.பெரியசாமி உள்ளிட்ட அனைவரையும் வழக்கிலிருந்து விடுவித்தது.
ஆனால், இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், “குற்றச்சாட்டில் முகாந்திரம் உள்ளது” எனக் கூறி, வழக்கை மீண்டும் திண்டுக்கல் நீதிமன்றத்தில் விசாரிக்க உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பை சவால் செய்து ஐ.பெரியசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி திபாங்கர் தத்தா, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்ததுடன், இந்த வழக்கில் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார்.