நங்கூரமிடும் இளம் ரத்தம் : ஆசியக் கோப்பையில் அபிஷேக் சர்மாவின் சிக்ஸ் தாண்டவம் !

ஆசியக் கோப்பை டி20 தொடரில் இந்தியாவின் இளம் வீரர் அபிஷேக் சர்மா ஆட்டம் எடுத்து ரசிகர்களை மயக்கி வருகிறார். தொடர்ந்து சிக்சர்களை பறக்கவிட்டு சாதனைபதிவில் முன்னேறி வருகிறார் இவர்.

ஆரம்பம் மற்றும் யுவராஜ் சிங் பங்களிப்பு

2000 செப்டம்பர் 4ஆம் தேதி பஞ்சாபின் அமிர்தசரஸில் பிறந்த அபிஷேக், சிறிய வயதிலேயே கிரிக்கெட்டில் அசத்தினார். 2018 அண்டர்-19 உலகக் கோப்பையில் இந்திய அணியில் இடம்பிடித்து, சுப்மன் கில், பிரித்வி ஷா போன்றோருடன் சாம்பியன் பட்டம் வென்றார். அதே ஆண்டு ஐபிஎல் ஏலத்திலும் இடம்பிடித்தார்.
2019-ம் ஆண்டில், தனது ரோல் மாடல் யுவராஜ் சிங்கின் ஆலோசனையில் பயிற்சி பெற்று பேட்டிங் முறைமையை மாற்றிக்கொண்டார். அதன் பிறகு சிதறடிக்கும் பவர் ஹிட்டராக உருமாறினார். ரசிகர்கள் இவரை “யுவராஜ் சிங் 2.O” என்றும் அழைக்கின்றனர்.

சர்வதேச கிரிக்கெட் அறிமுகம்

2024 ஜூலையில் ஜிம்பாப்வேக்கு எதிராக இந்திய அணிக்காக தனது முதல் டி20 போட்டியில் களம் இறங்கினார். அடுத்த ஆட்டத்திலேயே 47 பந்துகளில் சதமடித்து சிக்ஸர்களால் ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். அந்த வருடம் மட்டும் 44 சிக்சர்களை பறக்கவிட்டு கவனத்திற்கு வந்தார்.

ஆசியக் கோப்பையில் அதிரடி

இந்த தொடரிலும் அபிஷேக் சர்மா அதே பாணியைத் தொடர்ந்து வருகிறார்.

ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிராக 16 பந்துகளில் 30 ரன்கள்

பாகிஸ்தானுக்கு எதிராக 13 பந்துகளில் 31 ரன்கள்

ஓமான் அணிக்கு எதிராக 15 பந்துகளில் 38 ரன்கள்

சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக 39 பந்துகளில் 74 ரன்கள்

வங்கதேசத்துக்கு எதிராக 37 பந்துகளில் 75 ரன்கள்

மற்ற வீரர்கள் தடுமாறிய நிலையிலும், தனக்கென அதிரடியான இன்னிங்ஸ்களை வெளிப்படுத்தி வருகிறார்.

சாதனைகள்

5 இன்னிங்ஸ்களில் 248 ரன்கள் குவித்து தற்போது தொடரின் அதிக ரன் வீரராக உள்ளார்.

ஸ்ட்ரைக் ரேட் 206.66, சராசரி 49.

மொத்தம் 17 சிக்சர்களை அடித்து, 2008-ல் ஜெயசூர்யா (14 சிக்சர்கள்) வைத்திருந்த சாதனையை முறியடித்துள்ளார்.

ஆசியக் கோப்பை வரலாற்றில் தொடர்ந்து இரண்டு போட்டிகளில் அரைசதம் அடித்த இரண்டாவது வீரராக மாறியுள்ளார். (முதல் வீரர் – விராட் கோஹ்லி, 2022).

Exit mobile version