சர்வதேச அளவில் நகை விற்பனைத் துறையில் முன்னிலை வகிக்கும் மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நிறுவனம், மார்த்தாண்டம் கிளையில் மணப்பெண்களுக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ‘பிரைட்ஸ் ஆப் இந்தியா’ (Brides of India) பிரைடல் நகைகளின் கண்காட்சி மற்றும் விற்பனையை மிக விமரிசையாகத் தொடங்கியுள்ளது. திருமண வைபவங்களை மேலும் ஜொலிக்கச் செய்யும் நோக்கில் நடத்தப்படும் இந்தக் கண்காட்சியைப் பல முக்கியப் பிரமுகர்கள் முன்னிலையில் மார்த்தாண்டம் கிளைத் தலைவர் ஆஷ்லி கார்ட்வின் தொடங்கி வைத்தார். இந்த விழாவில் யேசுதாஸ், அமல் ராணி, செல்வி பினோலின், ரேஷ்மா, சிவப்பிரியா மற்றும் மலபார் கோல்டு நிறுவனத்தின் மேலாண்மை பயிற்சி நாதி, வர்த்தக மேலாளர் ஸ்ரீஜித், துணை விற்பனை மேலாளர் காஜா மொய்தீன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் இந்த கண்காட்சியையொட்டி அறிவிக்கப்பட்டுள்ள சிறப்புச் சலுகைகள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. தங்கம், வைரம், விலை உயர்ந்த கற்கள் (Gemstones) மற்றும் அன்கட் (Uncut) வைர நகைகளின் சேதாரத்தில் 30 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும், வைரத்தின் மதிப்பில் 30 சதவீதம் வரை அதிரடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரிய வாய்ப்பு வருகிற 2026 பிப்ரவரி 08-ம் தேதி வரை மட்டுமே மார்த்தாண்டம் கிளையில் அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மலபார் கோல்டு நிறுவனத்தின் ஒவ்வொரு நகையும் தனித்துவமான கலைநயத்துடன் வடிவமைக்கப்படுவது அதன் தனிச்சிறப்பாகும். இந்த கண்காட்சியில், அணிந்தாலே பேரழகு தரும் ‘மைன்’ (Mine) வைர நகைகள், பிரம்மாண்டமான வடிவமைப்புகளைக் கொண்ட வெட்டப்படாத வைரங்களால் செய்யப்பட்ட ‘எரா’ (Era) நகைகள், பொக்கிஷமாகக் கருதப்படும் விலை உயர்ந்த கற்கள் பதிக்கப்பட்ட ‘எத்தினிக்’ (Ethnic) தொகுப்புகள் மற்றும் இந்தியக் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் பாரம்பரிய வடிவமைப்பான ‘டிவைன்’ (Divine) ஆகிய புகழ்பெற்ற பிராண்டுகள் அணிவகுத்து நிற்கின்றன. ஒவ்வொரு நகையும் ஒரு கலைப்படைப்பாக உருவாக்கப்பட்டுள்ளதால், மணப்பெண்கள் தங்களுக்குப் பிடித்தமான நகைகளைத் தேர்ந்தெடுப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தற்போது உலகின் 14 நாடுகளில் 426 சில்லறை விற்பனை நிலையங்களுடன் உலகின் மிகப்பெரிய நகை விற்பனை நிறுவனமாக மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த நிறுவனத்தின் வெளிப்படையான விலை நிர்ணயம் வாடிக்கையாளர்களுக்கு மிகுந்த நம்பிக்கையை அளிக்கிறது. அனைத்து நகைகளும் நிகர எடை, கற்களின் எடை, சேதாரம், கற்களுக்கான தனி விலை ஆகியவற்றைத் தெளிவாகக் குறிப்பிடும் பட்டியலுடன் விற்பனை செய்யப்படுகின்றன. வணிகத்தில் மட்டுமின்றி சமூகப் பொறுப்பிலும் முன்னுதாரணமாகத் திகழும் இந்நிறுவனம், தனது லாபத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியை சுகாதாரம், கல்வி, வீட்டுவசதி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மகளிர் மேம்பாடு போன்ற திட்டங்களுக்குச் செலவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

















