எடப்பாடியார் தலைமையில் மீண்டும் பொற்கால ஆட்சி: வத்தலக்குண்டுவில் எம்ஜிஆர் நினைவு நாளில் அதிமுகவினர் சூளுரை!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பேருந்து நிலையம் முன்பாக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான பாரத ரத்னா புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 38-வது நினைவு தினம் உணர்ச்சிப்பூர்வமாக அனுசரிக்கப்பட்டது. தமிழக அரசியல் வரலாற்றில் நீங்கா இடம்பிடித்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் உருவப்படத்திற்கு அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மலர் மாலை அணிவித்து, மலர் தூவி தங்களது வீரவணக்கத்தைச் செலுத்தினர். இந்த நிகழ்வின் போது, வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றி பெற்று, கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் மீண்டும் தமிழகத்தில் மக்கள் நலன் காக்கும் பொற்கால ஆட்சியை அமைக்க அயராது பாடுபடுவோம் என அனைவரும் ஒருமித்த குரலில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

இந்த நினைவஞ்சலி கூட்டத்திற்கு வத்தலக்குண்டு கிழக்கு ஒன்றிய செயலாளர் சுதாகர் தலைமை தாங்கினார். நகர செயலாளர் பீர்முகமது முன்னிலை வகித்து உரையாற்றுகையில், தற்போதைய திமுக ஆட்சியில் நிலவும் பல்வேறு நிர்வாகச் சிக்கல்கள் குறித்துக் கடும் கண்டனம் தெரிவித்தார். குறிப்பாக, வத்தலக்குண்டு மார்க்கெட் மற்றும் பேருந்து நிலையத்தின் உட்புறம் அமைந்துள்ள கடைகளை முறையாகவும், வெளிப்படையாகவும் ஏலம் விட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். கடைகள் ஒதுக்கீட்டில் ஏதேனும் முறைகேடுகள் நடைபெற்றால் அல்லது பாரபட்சமான நடைமுறைகள் பின்பற்றப்பட்டால், அதிமுக சார்பில் பொதுமக்களைத் திரட்டிப் பிரம்மாண்டப் போராட்டம் நடத்தப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட மாணவரணி பொருளாளர் வெங்கடேஷ், ஒன்றிய இளைஞரணி செயலாளர் தட்டி முருகன், ஒன்றிய துணை செயலாளர் துரைராஜ், ஒன்றிய பொருளாளர் நடராஜன், ஒன்றிய மாணவரணி செயலாளர் செல்லப்பாண்டி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். ஒன்றிய இளைஞரணி செயலாளர் மகேந்திரன்,  மேலும் மாவட்டப் பிரதிநிதிகள் காசிராஜா, கிருபாகரன், எம்ஜிஆர் மன்ற துணைச்செயலாளர் ராமமூர்த்தி, மாவட்ட இளைஞரணி துணைத்தலைவர் கமலக்கண்ணன், ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் பாண்டிராதா, அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் குமார்,  எம்ஜிஆர் இணைச்செயலாளர் மற்றும் ஒன்றிய துணைச்செயலாளர் மணிகண்டன் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

முன்னாள் ஒன்றிய செயலாளர் எம்.வி.எம். பாண்டியன், சிறுபான்மைப் பிரிவு செயலாளர் தம்பிராஜா, சேவுகம்பட்டி பேரூர் இளைஞரணி கோபிராஜா, மாவட்ட மீனவரணி பொருளாளர் முருகேசன் மற்றும் ஒன்றிய இணைச் செயலாளர் பெருமாயி செல்வராஜ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். வத்தலக்குண்டு பேரூர் கழக நிர்வாகிகள், சிறுபான்மைப் பிரிவு செயலாளர் நாகூர் கனி, நகர துணை செயலாளர் குமரேசன், தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணைச்செயலாளர் அசோக் ராஜா, நகர அம்மா பேரவை செயலாளர் சண்முகவேல், கணவாய்பட்டி அதிமுக நிர்வாகி மருதுபாண்டி, ஒன்றிய எம்ஜிஆர் மன்றம் ராஜேந்திரன், நகர எம்ஜிஆர் மன்ற செயலாளர் நாசர் முகமது தாவூதி ஆகியோர் தொண்டர்களுடன் திரளாகப் பங்கேற்றனர்.

மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் மரிய ஜெயப்பிரகாசம், வழக்கறிஞர் புவனேஸ்வரன் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு எம்.ஜி.ஆரின் புகழைப் போற்றினர். வத்தலக்குண்டு பேரூர் மற்றும் மேற்கு ஒன்றியத்தைச் சேர்ந்த ஏராளமான சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து அஞ்சலி செலுத்தியதுடன், எடப்பாடியார் கரத்தை வலுப்படுத்த உறுதி பூண்டனர். வத்தலக்குண்டு பகுதியில் திரளான தொண்டர்கள் கூடியிருந்ததால் அந்தப் பகுதியே அதிமுகவின் கோட்டையாகக் காட்சியளித்தது.

Exit mobile version