இந்தியா-இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடரில் தன்னுடைய காயத்திலிருந்து மீண்டதும், இந்த தொடரில் மட்டுமே ஆறு முக்கிய சாதனைகள் நிகழ்த்தியுள்ளார் பண்ட்.
பிரபல டெஸ்ட் வீரர் விரேந்தர் சேவாக்கின் சாதனையை பண்ட் தற்போது சமன்செய்து விட்டார். இந்தியா சார்பாக டெஸ்ட் போட்டிகளில் அதிக சிக்சர்கள் அடித்தவர்களின் பட்டியலில் இருவரும் தற்போது 90 சிக்சர்களுடன் இணைந்து முதலிடத்தில் உள்ளனர். பண்ட் இன்னும் ஒரு சிக்சர் அடித்தால், அந்த பட்டியலில் தனித்த முதலிடத்தை பிடிக்கவுள்ளார்.
மேலும், SENA நாடுகளில் அதிக டெஸ்ட் அரைசதங்கள் (50+) அடித்த விக்கெட் கீப்பராக புதிய உலக சாதனையை செய்துள்ளார். இந்த தொடரில் மட்டும் 5 அரைசதங்களை இந்திய விக்கெட் கீப்பராக இவர் பதிவு செய்துள்ளார். இது இங்கிலாந்து மண்ணில் ஒரு இந்திய விக்கெட் கீப்பர் அடித்த அதிக அரைசதங்கள் என்ற சாதனையாகும்.
பண்ட் இத்தொடரில் மொத்தம் 479 ரன்கள் குவித்து, ஒரு இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் பெற்ற விக்கெட் கீப்பராகும் பெருமையைப் பெற்றுள்ளார்.
மேலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் இந்தியாவிற்காக அதிக ரன்கள் அடித்த வீரராக இவர் உருவெடுத்துள்ளார். இதற்கு முன்னர் முதலிடத்தில் இருந்த ரோகித் சர்மாவை (2717 ரன்கள்) மிஞ்சிய பண்ட், தற்போது 2731 ரன்கள் அடித்து முன்னிலை வகிக்கிறார்.
அதேவேளை, இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் 1000 ரன்கள் அடித்த முதல் வெளிநாட்டு விக்கெட் கீப்பராகும் சாதனையை உருவாக்கி, முன்னாள் இந்திய கேப்டன் எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்துள்ளார்.
தனது வீரவாண திரும்பி வரவும், ஒரு தொடரில் இத்தனை சாதனைகள் படைத்ததையும் பொருத்தவரை, இந்த தொடரானது ரிஷப் பண்ட் சாமர்த்தியத்தை மிரட்டும் விதத்தில் நிரூபித்துள்ளது.