இந்திய பாதுகாப்பு துறையில் புதிய சாதனை ஒன்று பதிவாகியுள்ளது. ஆந்திரப் பிரதேசம் கர்னூல் பகுதியில், ட்ரோனில் இருந்து ஏவுகணை வெற்றிகரமாக ஏவி சோதனை செய்யப்பட்டது.
இந்த சோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) முன்னெடுத்தது. இந்த டெக்னாலஜி சோதனை மிகச்சிறப்பாக நிறைவடைந்ததை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சமூக வலைதளத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.
தனது ட்வீட்டில் அவர் கூறியதாவது :
“இந்தியாவின் பாதுகாப்புத் துறைக்கு இது மிகப்பெரிய முன்னேற்றமாகும். கர்னூலில் ட்ரோனில் இருந்து ஏவுகணையை சோதனை செய்த பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புக்கும், தொடர்புடைய அனைத்து தொடக்க நிறுவனங்களுக்கும் எனது வாழ்த்துகள். இது முக்கியமான பாதுகாப்பு தொழில்நுட்பங்களை உருவாக்க இந்தியா தயாராக இருப்பதை உறுதி செய்கிறது.”
இந்த சாதனையின் மூலம் எதிர்காலத்தில் இந்தியாவின் பாதுகாப்புத் திறன் மேலும் பலப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.