சென்னை திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு நேற்று மடிப்பிச்சை எடுத்து காணிக்கை செலுத்தினார்.
இது தொடர்பாக நளினி கூறியதாவது:-
என்னுடைய இஷ்ட தெய்வம், என்னுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் தெய்வம், என்னுடைய உயிராக இருக்கும் தெய்வம் திருவேற்காடு ஸ்ரீ காருமாரியம்மன் எனது கனவில் வந்து எனக்கு என்ன செய்யப் போகிறாய் எனக் கேட்டது.
என்ன செய்வது என்று தெரியாமல் மடிப்பிச்சை ஏந்தி, என்னால் முடிந்த காணிக்கையை தருகிறேன் அம்மா என்று தெரிவித்தேன்.
இவ்வாறு நளினி தெரிவித்தார்.