கடலூர் :
மக்கள் குறைகளை நேரில் கேட்டறிந்து தீர்வு காணும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் இன்று தொடங்கியது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் உள்ள வாண்டையார் திருமண மண்டபத்தில் திட்டத்தைத் துவக்கி வைத்தார்.
திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சியில், முதல்வர் நேரில் மக்களை சந்தித்து, அவர்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். மக்கள் எழுப்பும் கோரிக்கைகள், பிரச்சனைகளுக்கு 45 நாட்களுக்குள் தீர்வு வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. அதேசமயம், ரேஷன் கார்டு மற்றும் ஆதார் கார்டு பெயர் மாற்றம் போன்ற அடிப்படை கோரிக்கைகளுக்கு அன்றே தீர்வு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
முகாம்கள் விவரம் :
முதற்கட்டமாக 3,563 முகாம்கள் ஆகஸ்ட் 15 வரை நடைபெற உள்ளன.
நகரப்பகுதிகளில்: 1,428
ஊரக பகுதிகளில்: 2,135
முழு திட்டத்தில் நவம்பர் மாதம் வரை மொத்தம் 10,000 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
நகரப்பகுதிகளில்: 3,768
ஊரக பகுதிகளில்: 6,232
பிரத்யேக இணையதளம்:
மக்கள் இந்த முகாம்கள் நடைபெறும் இடங்கள் குறித்து அறியக்கூடிய வகையில், தமிழக அரசு பிரத்யேக இணையதளத்தையும் தொடங்கி வைத்துள்ளது.