தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் 10 நாட்களில் 100% டாக்டர் பற்றாக்குறை என்பது இருக்காது – அமைச்சர் மா சுப்பிரமணியன் பேட்டி
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் அடுத்த வருடத்தில் ஏற்படும் காலியிடங்களையும் நிரப்பும் விதத்தில் மருத்துவர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர் – அமைச்சர் மா சுப்பிரமணியன் பேட்டி
6 மாவட்டங்களில் தற்போது ஆஞ்சியோ கொண்டு வரப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் விரைவில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. – அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி
ஒரு வருடத்திற்கு முன்பு தென்காசியில் நடந்தது. எந்த மருத்துவர் பேசினார் என இதுவரை தெரியாமல் உள்ளது. யார் பேசியது என கண்டுபிடிக்க மூன்று ஜே.டி குழு ஆய்வு செய்தனர். காவல்துறையிடமும் புகார் அளித்துள்ளோம். இதுவரை யார் என கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த மருத்துவரின் குரல் யார் உடையது என தெரிந்தால் கூறுங்கள் நடவடிக்கை எடுக்கிறோம். – அரசு மருத்துவ நிகழ்ச்சி மருத்துவர் இடமிருந்து பணம் வசூலிப்பது குறித்த ஆடியோ சம்பந்தமான கேள்விக்கு அமைச்சர் மா.சு பேட்டி
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2.20 கோடி மதிப்பீட்டில் புதிய சிடி ஸ்கேன் கருவியையும், 61.29 லட்சம் மதிப்பிலான டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி என மொத்தமாக 2.81 கோடி செலவில் உயர் மருத்துவ உபகரணங்களை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்கள் ஐ. பெரியசாமி, சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம், சட்டமன்ற உறுப்பினர்கள்
பின் செய்தியாளர்களை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சந்தித்து கூறும்போது,
“4 வருடத்திற்கு முன்பு சுகாதாரத்துறை மூலம் இயங்கி வந்த 1000 மேற்பட்ட வாடகை கட்டிடங்களும், 1500 க்கு மேற்பட்ட பழமையான கட்டிடங்களும் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது.
தற்போது 1600 புதிய கட்டடங்களை இந்த அரசு திறந்து வைத்துள்ளது.
தடுப்பூசி பணிகளில் புதிதாக பணியமர்த்தப்பட்டுள்ள ஒப்பந்த பணியாளர்களை ஈடுபடுத்த கூடாது என பொது சுகாதார துறை செவிலியர் கூட்டமைப்பு சங்கம் கூறியது குறித்த கேள்விக்கு
கொரோனா தடுப்பூசி நாங்கள் போட மாட்டோம் என கூறினார்கள். ஒப்பந்த பணியாளர்கள் அப்போது தடுப்பூசி போட்டனர். தடுப்பூசிகள் யார் வேண்டுமானாலும் போடலாம். அந்தப் பணி இவர்களுக்கும் பகிர்ந்து அளிக்கப்பட உள்ளது. அந்த சங்கத்தினர் இடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம். எந்தவித பிரச்சனையும் ஏற்படாமல் குறிப்பிட்ட காலத்திற்குள் தடுப்பூசிகள் போடப்படும். பயிற்சி அளித்த பின்பே தடுப்பூசி போடும் பணி நடைபெறும்.
திண்டுக்கல்லில் அரசு மருத்துவமனைகள் பல திறக்கப்பட்டாலும் அடிப்படை வசதிகள் பல இல்லாமல் இருப்பது குறித்த கேள்விக்கு
திண்டுக்கல் மருத்துவ கல்லூரி மருத்துவமனை தொடங்கப்பட்டு 3 ஆண்டுகள் ஆகிறது. 1218 பணியாளர்கள் உள்ளனர். பயன்பாடுகள் அதிகரிக்க, அதிகரிக்க தேவைகள் நிறைவேற்றப்படும்.
6 வருடத்திற்கு மேலாக தீவிர தலை காயப் பிரிவு செயல்பட்டு வந்தாலும் மருத்துவர்கள் இல்லாத நிலை இருப்பது குறித்த கேள்விக்கு
மதுரையில் இருந்து ஒரு மருத்துவர் செயல்பட்டு வருகிறார் என கூறிய போது, திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் தற்போது அவர் இல்லை என தெரிவித்தார்.
2000க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர் அவர்கள் சிறப்பு மருத்துவர்கள் டி.எம்.எஸ் சென்றுள்ளனர்.
அதன் பின்பு, ஒரு மாதத்திற்குள் படிப்படியாக அனைத்து இடங்களுக்கும் வந்து விடுவார்கள். அப்போது திண்டுக்கல் மாவட்டத்தில் தீவிர தழை காயப் பிரிவிற்கு மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள். ஏற்கனவே 23 சிறப்பு மருத்துவர்கள் உள்ளனர். தேவைக்கேற்ப மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள்.
ஆஞ்சியோ சிகிச்சை இல்லாதது குறித்த கேள்விக்கு
11 மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும். அஞ்சியோ என்பது ரூ.14 கோடி செலவு செய்து வைக்கக்கூடிய பெரிய அமைப்பு. தற்போது ஆறு மாவட்டங்களில் கடந்த நான்கு வருடங்களில் இந்த அமைப்பை உருவாக்கியுள்ளோம். வருங்காலங்களில் ஆஞ்சியோ மற்றும் இருதய அறுவை சிகிச்சை இங்கும் அமைக்கப்படும்.
ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பிணி பெண்கள் அமர்வதற்கு போதிய வசதிகள் இல்லை என்பது குறித்த கேள்விக்கு
தமிழ்நாட்டில் 2286 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளது. பல்வேறு இடங்களில் அதிநவீன வசதிகளுடன் செயல்படுகிறது சில இடங்களில் சிறிய கட்டிடங்கள் செயல்பட்டு வருகிறது. அதையும் மாற்றுவதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
பழனியில் மாவட்ட அரசு மருத்துவமனை பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் 25 மாவட்ட அரசு மருத்துவமனை பணிகள் 1018 கோடி செலவில் நடைபெற்று வருகிறது.
மதுரை தோப்பூர் மருத்துவமனையை ஆய்வு செய்தோம் அங்கு சிறப்பாக மருத்துவமனை இருந்தது மருத்துவர்களுக்கு பாராட்டு தெரிவித்தோம்.
மூன்று தினங்களுக்கு முன்பு சென்ற இடத்தில் மருத்துவர்கள் சரியான மணி நேரத்தில் வரவில்லை என மருத்துவர், செவிலியர் மற்றும் கட்டிட காவலர் பணியிட நீக்கம் செய்துள்ளோம்.
அரசு மருத்துவ நிகழ்ச்சிகள் மருத்துவர்களிடம் பணம் பெற்று நடத்தப்படுவதாக ஆடியோ வெளியானது குறித்த கேள்விக்கு
ஒரு வருடத்திற்கு முன்பு தென்காசியில் நடந்தது. எந்த மருத்துவர் பேசினார் என இதுவரை தெரியாமல் உள்ளது. யார் பேசியது என கண்டுபிடிக்க மூன்று ஜே.டி குழு ஆய்வு செய்தனர். காவல்துறையிடமும் புகார் அளித்துள்ளோம். இதுவரை யார் என கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த மருத்துவரின் குரல் யார் உடையது என தெரிந்தால் கூறுங்கள் நடவடிக்கை எடுக்கிறோம்.
மருத்துவர் பற்றாக்குறை குறித்த கேள்வி
ஆரம்ப சுகாதார நிலையங்களில் அடுத்த வருடம் காலியாகும் இடங்களுக்கு சேர்த்து நியமனம் செய்துள்ளோம்.
அரசு மருத்துவமனைகளில் இன்னும் பத்து நாட்கள் கழித்து நீங்களே கூறுவீர்கள் மருத்துவர் பணியிடம் அனைத்தும் 100% நிரப்பப்பட்டது என்று” என தெரிவித்தார்.