- ஆபரேஷன் சிந்துார் இந்திய வரலாற்றில் ஒரு திருப்பு முனை நிகழ்வாக இருந்து வருகிறது என்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி புகழாரம் சூட்டினார்.
- ஹிந்து மக்களிடையே ஒற்றுமை எப்போதும் வராது என்ற தைரியத்தில், அரசியல்வாதிகள் இன்னும் பழைய அரசியலை செய்கின்றனர், என்று மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டில் பா.ஜ., மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
- ஈரான் மீது நடத்திய தாக்குதலில் எங்களது ராணுவம், ஈரான் ராணுவத்தையோ, அந்நாட்டு மக்களையோ குறி வைக்கவில்லை, என்று அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்செத் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
- ஈரான் மீதான அமெரிக்க தாக்குதலின் நீட்சியாக, டிரம்பிடம் அது பற்றி பேசும் திட்டமே இல்லை என்று ரஷ்யா திட்டவட்டமாக அறிவித்து உள்ளது.
- மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டின் நிறைவாக, 5 லட்சம் பக்தர்கள் சேர்ந்து கந்த சஷ்டி கவசம் பாடி, பரவசம் ஏற்படுத்தினர்.மாநாட்டில் பேசிய ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண், முருகனைப்பற்றி இழிவாக யாரேனும் பேசினால் உங்கள் இதயம் நொறுங்க வேண்டாமா, பதற வேண்டாமா, துடிக்க வேண்டாமா, என்று ஆவேசமாக பேசினார்.
- ஹோர்முஸ் நீரிணையை மூட ஈரான் பார்லிமென்ட் அனுமதி அளித்துள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
- போர் பிரச்னைகளை தீர்க்காது. ஆபத்தில் ஆழ்த்தும் போரை தவிர்க்க வேண்டும் என மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் நிலவி வரும் நிலையில் போப் லியோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- பாதுகாப்பு, தொழில்நுட்ப கோளாறு என தொடர் நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கும் ஏர் இந்தியா, விமான சேவைகளை 5 சதவீதம் குறைப்பதாக அறிவித்துள்ளது.
- ஈரானின் அணு சக்தி நிலையங்களில், 7 B-2 குண்டுவீச்சு விமானங்கள் உட்பட 125 க்கும் மேற்பட்ட விமானங்கள் மூலம் 25 நிமிடங்களில் துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டது என அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது.
- ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானாவுடன் ஒப்பிடுகையில், தமிழகத்தில் தொழில்துறை பின்தங்கியதற்கு முதல்வர் ஸ்டாலினுக்கு 2026 தேர்தலில் மக்கள் தோல்வியை பரிசாக அளிப்பார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் இ.பி.எஸ்., கூறி உள்ளார்.