முன்னாள் இந்திய வீரர் மற்றும் யுவராஜ் சிங்கின் தந்தையுமான யோகராஜ் சிங், அணியில் இருந்து விலக்கப்பட்ட 2011 உலகக்கோப்பை வீரர்களுக்காக தனது கடும் வேதனையையும், BCCI மற்றும் முன்னாள் தேர்வுக் குழுத் தலைவர் மீது தனது ஆத்திரத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.
2011 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் கௌதம் கம்பீர், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், ஜாகீர் கான், முகமது கைஃப், விவிஎஸ் லட்சுமண் மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் முக்கிய பங்காற்றிய வீரர்களாக இருந்தனர். ஆனால் உலகக்கோப்பைக்குப் பிறகு, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர்ச்சியான தோல்விகளுக்குப் பின்னர், அவர்கள் மெதுவாக தேசிய அணியில் இருந்து நீக்கப்பட்டனர்.
இது குறித்து யோகராஜ் கூறியதாவது:
“அந்த காலத்திலிருந்த தேர்வுக் குழுவினர் எந்த ஒரு காரணமுமின்றி ஏழு வீரர்களின் வாழ்க்கையையே அழித்துவிட்டனர். அவர்கள் அனைத்தும் உலகக்கோப்பை வெற்றிக்கு காரணமான முக்கிய வீரர்கள். ஆனால் 2011 பிறகு அவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனால் இந்திய அணி தொடர்ந்து தோல்வி கண்டது.”
மேலும் அவர், முன்னாள் தேர்வுக் குழுத் தலைவர் மொகிந்தர் அமர்நாத் கூறிய கருத்தை மேற்கோள் காட்டினார்:
“தோனி கேப்டனாக இருந்தபோது ஐந்து தொடர்கள் தோல்வியடைந்த இந்திய அணியில், அவரை பதவியிலிருந்து நீக்கத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் அந்த முயற்சி BCCI தலைவரால் தடுக்கப்பட்டது.”
யோகராஜ் சிங்கின் இந்தக் கடும் விமர்சனம், மீண்டும் ஒருமுறை 2011 பிந்தைய இந்திய அணியின் தேர்வுக் கோணத்தில் நடைபெற்ற முடிவுகள் குறித்து கேள்வி எழுப்பும் வகையில் உள்ளது