மும்பை :
2025 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியின் கேப்டனாக திறமையாக அணியை ஃபைனலுக்கு அழைத்துச் சென்ற ஸ்ரேயாஸ் ஐயர், அதன் பிறகு நடைபெற்ற மும்பை டி20 லீக் போட்டியில் சோபோ மும்பை ஃபால்கன்ஸ் அணிக்கு கேப்டனாக பதவி வகித்தார்.
வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஃபைனலில், அவர் தலைமையிலான சோபோ மும்பை ஃபால்கன்ஸ் அணி, சித்தேஷ் லாட் தலைமையிலான மும்பை தெற்கு மத்திய அணியை எதிர்கொண்டது.
பரபரப்பான தொடக்கம் – ஸ்ரேயாஸின் அணி எதிர்பார்ப்பை உயர்த்தியது !
முதலில் பேட்டிங் செய்த சோபோ ஃபால்கன்ஸ், மயுரேஷ் விளாசிய அரைசதம் மற்றும் 18 வயது இளம் வீரர் ஹர்ஷ் சுழற்றிய 4 சிக்சர்கள் என இருவரின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவரில் 157 ரன்கள் எடுத்தது.
சின்மயின் சாதனையால் கோப்பை மும்பை தெற்கு மத்திய அணிக்கே !
158 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய மும்பை தெற்கு மத்திய அணி,
தொடக்க ஓவர்களில்வே 40 ரன்கள் எடுத்தது. ஆனால் அதன்பின் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பந்துவீச்சு அணி, 3 விக்கெட்டுகளை வீழ்த்தி மீண்டும் போட்டியில் திரும்பியது.
இதனைத்தொடர்ந்து, சின்மய் மற்றும் அவாய்ஸ் கான் இடையே உருவான 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் மேலும் சின்மயின் நிலைத்த 53 ரன்கள், மூலம் மும்பை தெற்கு மத்திய அணி வெற்றியை நோக்கி பயணித்து, கோப்பையை கைப்பற்றியது.
2025 ஐபிஎல் இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியுடன் தோல்வி கண்ட ஸ்ரேயாஸ் ஐயர், இப்போது மும்பை டி20 லீக் ஃபைனலிலும் வெற்றியை தவறவிட்டுள்ளார். தொடர்ந்து இரண்டு பெரிய ஃபைனல்களில் தோல்வி என்பது அவரது கேப்டனாகும் பதவிக்கு சவாலாக அமைந்துள்ளது.