March 23, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

பெண் போலீசார் கழிவறையில் செல்போன் வைத்து ஆபாச வீடியோ: பரமக்குடியில் எஸ்.எஸ்.ஐ. முத்துப்பாண்டி கைது

by sowmiarajan
January 19, 2026
in News
A A
0
பெண் போலீசார் கழிவறையில் செல்போன் வைத்து ஆபாச வீடியோ: பரமக்குடியில் எஸ்.எஸ்.ஐ. முத்துப்பாண்டி கைது
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரன் மணிமண்டபம் திறப்பு விழாவையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த விழாவிற்காகத் திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட அண்டை மாவட்டங்களிலிருந்து ஏராளமான பெண் போலீசார் பாதுகாப்புப் பணிக்காகப் பரமக்குடிக்கு வரவழைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் மணி நகர் பகுதியில் உள்ள புறநகர் காவல் சோதனைச் சாவடியில் பணியில் அமர்த்தப்பட்டிருந்தனர். அதே பகுதியில் பரமக்குடி நகர் காவல் நிலைய வாகன ரோந்து பிரிவு சிறப்புச் சார்பு ஆய்வாளர் (SSI) முத்துப்பாண்டி (58) என்பவரும் பணியில் இருந்தார். பாதுகாப்புப் பணியில் இருந்த பெண் போலீசார், அங்குள்ள சோதனைச் சாவடி மையக் கழிவறையைப் பயன்படுத்தியுள்ளனர்.

மூன்று பெண் போலீசார் கழிவறைக்குச் சென்று வந்த நிலையில், நான்காவதாகச் சென்ற பெண் போலீஸ் கழிவறையில் உள்ள வாஷ்பேஸின் கீழ்ப் பகுதியில் கருப்பு நிற பாலித்தீன் கவர் ஒன்று சந்தேகத்திற்கிடமான முறையில் ஒட்டப்பட்டிருப்பதைக் கண்டுள்ளார். அந்தப் பாலித்தீன் கவரை எடுத்துச் சோதித்தபோது, அதில் சிறிய துளையிடப்பட்டு உள்ளே ஒரு செல்போன் கேமரா செயல்படும் நிலையில் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அந்த செல்போனில் வீடியோ பதிவாகிக் கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக அதனைப் பாதுகாப்புப் பணியில் இருந்த உயர் அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். இது குறித்து உயர் அதிகாரிகள் நடத்திய ரகசிய விசாரணையில், அந்த செல்போன் அங்குப் பணியில் இருந்த எஸ்.எஸ்.ஐ. முத்துப்பாண்டியினுடையது என்பது உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் போலீசார் அளித்த புகாரின் பேரில், பரமக்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறப்புச் சார்பு ஆய்வாளர் முத்துப்பாண்டியை நேற்று அதிரடியாகக் கைது செய்தனர். விசாரணையில், அவர் ஏற்கனவே பலமுறை இது போன்ற சர்ச்சைக்குரிய செயல்களில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. குறிப்பாக, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இதே காவல் நிலையத்தில் ஏட்டாகப் பணியாற்றியபோது, பிறந்தநாள் விழாவில் பெண் போலீசாருக்குக் கேக் ஊட்டிவிட்ட விவகாரத்தில் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாகி இடமாற்றம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. பணி ஓய்வு பெற இன்னும் சில காலமே உள்ள நிலையில், ஒரு மூத்த அதிகாரி சக பெண் ஊழியர்களின் கண்ணியத்தைச் சிதைக்கும் வகையில் இத்தகைய கீழ்த்தரமான செயலில் ஈடுபட்டது காவல்துறைக்கே பெரும் அவமானத்தைத் தேடித்தந்துள்ளதாகச் சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாகத் துறை ரீதியான விசாரணையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Tags: femaleincident ssiofficer obscenePOLICEvideo
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மாமனாரை மிரட்டி வானத்தை நோக்கித் துப்பாக்கியால் சுட்ட அதிமுக நிர்வாகி கைது.

Next Post

தென் மண்டலத்தில் அதிரடி ‘ஆபரேஷன் டிராக்நெட்’: தலைமறைவாக இருந்த குற்றவாளிகளைச் சிக்க வைத்து ஐஜி அதிரடி.

Related Posts

அரசியலமைப்பு சட்டத்தை முழுமையாக தெரிந்து கொள்ள தமிழக ஆளுநர் ராசேந்திர விஸ்வநாத் அர்லேகர் பேச்சு
News

March 22, 2026
வலங்கைமான் மகா மாரியம்மன் ஆலயத்தில் பாடை காவடி திருவிழா
Bakthi

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் அவதி

மயிலாடுதுறையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை MLA ராஜகுமார் பங்கேற்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.