வரும் 29 ஆம் தேதி அன்று சேலத்தில் நடைபெறவுள்ள பாமகவின் பொதுக்குழு கூட்டம் தொடர்பாக, அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், இது உண்மையான பாமகவின் மறுபிறப்பு என தெரிவித்துள்ளார்.
இது குடும்ப சண்டையல்ல என்றும், பதவிக்கான போர் அல்ல என்றும் இயக்கத்தின் ஆன்மாவை காப்பாற்றும் போராட்டம் இது என்றும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் பெற்ற தகப்பனுக்கே துரோகம் செய்த அன்புமணி நாளை இந்த கட்சியை எது வேண்டுமானாலும் செய்வார் என்று அதிருப்தியுடன் பேசியுள்ளார். மேலும் அன்புமணியுடன் சென்றவர்கள் இதனை உணர்ந்து செயல்பட வேண்டும் எனவும் மிகுந்த சோகத்துடன் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
















