அதிமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்க, 10 பேர் கொண்ட குழுவை எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதன்படி, முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செம்மலை, பா.வளர்மதி, ஒ.எஸ்.மணியன், ஆர்.பி. உதயக்குமார், வைகை செல்வன் ஆகியோர், தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
இவர்கள் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, பல்வேறு தரப்பட்ட மக்களின் கருத்துகளை கேட்டறிந்து, தேர்தல் அறிக்கை தயாரிப்பார்கள். இவர்களின் சுற்றுப் பயண திட்டம் விரைவில் வெளியிடப்படும் என்றும் எடப்பாடி பழனிசாமி, தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
















