இயேசு கிறிஸ்து அவதரித்த இந்த நாளை, கிறிஸ்துமஸ் விழாவாக கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகின்றனர். கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு சென்னை சாந்தோமில் அமைந்திருக்கும் வரலாற்று சிறப்பு மிக்க புனித தோமையார் தேவாலயத்தில், சிறப்பு பிராதனைகள் நடைபெற்றது. கடும் பனிப்பொழிவையும் பொறுப்பெடுத்தாமல், சிறுவர் முதல் பெரியவர்கள் வரை புத்தாடை அணிந்து, பிரார்த்தனைகளில் பங்கேற்றனர். இயேசு கிறிஸ்து பிறந்துவிட்டார் என்ற நற்செய்தி அறிவிக்கப்பட்டவுடன், கிறிஸ்தவ மக்கள், ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டார்கள்.
மகிழ்ச்சியும், அமைதியும், சமாதானமும், நம்பிக்கையும் உடைய வாழ்க்கை அனைவருக்கும் கிடைத்திட வேண்டும் என்று பிரார்த்தனையில் வலியுறுத்தப்பட்டதாக, பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி கூறினார்.

















