1.ஊடுருவல்காரர்கள் தேர்தலில் வாக்களிப்பதை தடுக்கவே எஸ்.ஐ.ஆர் கணக்கெடுப்பு நடத்தப்படுவதாக பிரதமர் மோடி விளக்கம் – தேசவிரோதிகள் எதிர்ப்பதாகவும் கடும் தாக்கு
2.அமெரிக்க அதிபர் டிரம்பை திருப்திபடுத்தவே, அணுசக்தி துறையில் தனியார் பங்களிக்கும் சட்டத்தை பிரதமர் மோடி நிறைவேற்றியுள்ளார் – காங்கிரஸ் குற்றச்சாட்டு
3.சிறுபான்மையினரே தங்களது கல்வி நிறுவனங்களுக்கான ஆசிரியர்களை தேர்வு செய்யலாம் என, நெல்லை கிறிஸ்துமஸ் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு – பொருநை அருங்காட்சியகத்தையும் திறந்துவைத்தார்
4.இதுவரை எந்த தேர்தலிலாவது திமுக தனிப்பெரும்பாண்மையுடன் வெற்றிப் பெற்றதுண்டா? – நயினார் நாகேந்திரன் கேள்வி
5.விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கான
பாராசூட் சோதனை வெற்றி – இஸ்ரோ அறிவிப்பு
6.திருப்பரங்குன்றம் மலையில் தீபமேற்றக்கோரி தீக்குளித்த முருக பக்தருக்கு மோட்ச தீபம் ஏற்ற முயற்சி –பல இடங்களில் பிஜேபி-யினர் கைது
7.சென்னை- நெல்லை இடையே இயக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரயில் இனி விருத்தாசலத்திலும் நின்று செல்லும் – பயணிகள் வரவேற்பு
8.ராமேஸ்வரம் வந்த ரயிலில் பயணச்சீட்டு எடுக்காமல் பயணித்த வடமாநிலத்தவர்கள் — அபராதமும் செலுத்தாமல் தப்பியோட்டம்
9.வங்கதேச நாடாளுமன்றத்தை முற்றுகையிட வன்முறை கும்பல் முயற்சி –
தொடரும் வன்முறைகளால் பதற்றம்

















