நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த செந்தில்நாதன், கூட்டப்பள்ளி பகுதியில் உள்ள மகளிரணி நிர்வாகி ஒருவர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, தகாத உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்கள் அவர்களை கையும், களவுமாக பிடித்தனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.
இந்நிலையில், செந்தில்நாதனை நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கி, அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நடவடிக்கை எடுத்துள்ளார். த.வெ.க.-வில் மாவட்ட செயலாளர் ஒருவர், பாலியல் விவகாரத்தில் சிக்கி, பதவி நீக்கம் செய்யப்பட்டிருப்பது கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.















