திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில், நத்தம் தொகுதிக்குட்பட்ட சாணார்பட்டி தெற்கு ஒன்றியம், தவசிமடை ஊராட்சியில் கழக வாக்குச்சாவடி முகவர்களுக்கான (Booth Agents) முக்கிய ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.அ.தி.மு.க துணைப் பொதுச்செயலாளரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் இரா. விசுவநாதன் அவர்களின் அறிவுறுத்தலின்படி இக்கூட்டம் நடைபெற்றது. மாநில அம்மா பேரவை இணைச் செயலாளரும், முன்னாள் நத்தம் ஒன்றியக் குழுத் தலைவருமான RVN. கண்ணன் அவர்கள் தலைமை தாங்கி முகவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
விராலிப்பட்டி, தவசிமடை ஊராட்சி. தவசிமடை ஊராட்சியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளின் முகவர்கள் மற்றும் முக்கியக் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர். வரவிருக்கும் தேர்தல்களை எதிர்கொள்ளும் வகையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் மற்றும் பூத் வாரியாகக் கட்சிப் பணிகளைத் தீவிரப்படுத்துவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
கழகத்தின் பலத்தை அடிமட்ட அளவில் உறுதி செய்யும் வகையில், முகவர்கள் சுறுசுறுப்புடன் பணியாற்ற வேண்டும் என RVN. கண்ணன் இக்கூட்டத்தில் கேட்டுக்கொண்டார். இதில் சாணார்பட்டி தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் கழகத் தொண்டர்கள் திரளாகப் பங்கேற்றனர்.

















