வத்தலக்குண்டுவில் அமைந்துள்ள சத்குருநாதரின் நாமத்வாரில், மார்கழி மாதத்தின் முதல் நாளை முன்னிட்டு இன்று சிறப்புப் பிரார்த்தனைகள் மற்றும் ஆன்மீக நிகழ்வுகள் குருநாதரின் ஆசியுடன் பக்தி பரவசத்துடன் நடைபெற்றன. அதிகாலை முதலே பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டு கஜேந்திர ஸ்துதி பாராயணம் செய்தனர்.
மார்கழி மாதத்திற்கே உரிய சிறப்பான திருப்பாவை பாடல்கள் சேவிக்கப்பட்டு, இறைவனுக்குப் பாமாலை சூட்டப்பட்டது. உலக நன்மைக்காகவும், பக்தர்களின் நல்வாழ்விற்காகவும் சிறப்பு அர்ச்சனைகள் மற்றும் ஷோடச உபசார பூஜைகள் நேர்த்தியாக நடைபெற்றன. வழிபாட்டின் நிறைவாகக் கலந்துகொண்ட அனைத்துப் பக்தர்களுக்கும் புனிதமான பிரசாதம் வழங்கப்பட்டது.
நாமத்வாரில் மார்கழி மாதம் முழுவதும் அதிகாலையில் மஹா மந்திர கீர்த்தனம், திருப்பாவை மற்றும் திருவெம்பாவை பாடல்கள் பாடுவது வழக்கம். இன்றும் அந்தத் தொடக்க விழா மிகவும் சிறப்பாக அமைந்தது.

















