நில அபகரிப்பு வழக்கிலிருந்து விடுவிக்கக்கோரி முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அவர் மீது தாக்கல் செய்யப்பட்ட இரு வேறு வழக்குகளில், நிலத்தை அபகரிக்க போலி ஆவணம் தயாரித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கிலிருந்து அழகிரி விடுவிக்கப்பட்டார். ஆனால், நில அபகரிப்பு வழக்கில் இருந்து விடுக்க விசாரணை நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்த உத்தரவை, சென்னை உயர்நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது.
இந்நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மு.க.அழகிரி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி பிரசாந்த் குமார் மிஸ்ரா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே சரியான கருத்தையே தெரிவித்து இருக்கிறது. குறிப்பாக வழக்கை சந்திக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறது. எனவே, உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட விரும்பவில்லை என்று கூறிய நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர்.
















