பா.ம.க.வின் தலைவர் யார் என்ற போட்டியில் அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்த டெல்லி உயர்நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றத்தை நாடுமாறு உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது போலியான ஆவணங்களை சமர்பித்து அன்புமணி மோசடி செய்திருப்பதாக ராமதாஸ் தரப்பில் கூறப்பட்டது. இது பதிவு செய்யப்பட்ட கட்சி என்பதால், தேர்தல் ஆணையம் அதன் உட்கட்சி விவகாரங்களில் தலையிட முடியாது என நீதிபதிகள் குறிப்பிட்டனர். மேலும், ஆவணங்களின் அடிப்படையிலேயே அன்புமணியை தலைவராக அங்கீகரித்ததாகவும், அதில் பிரச்சினை ஏற்பட்டால் கட்சியின் சின்னத்தை முடக்கவும் தயார் என தேர்தல் ஆணையம் கூறியது. இதையடுத்து, மனுவை முடித்துவைத்த நீதிபதிகள், உரிமையியல் நீதிமன்றத்தை நாடுமாறு உத்தரவிட்டனர்.
















