திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் சிறப்பு வாக்காளர் சேர்ப்புப் பணியில் முறைகேடு ஏற்பட்டுள்ளதாக தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி கடும் புகார் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, சின்னாளபட்டி பேரூராட்சியில் 7,227 வாக்காளர்கள் நீக்கப்பட்டு “Shifted” எனக் குறிக்கப்பட்டு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.இந்த முறைகேடு 26 வாக்குச்சாவடிகளில் இடம்பெற்றுள்ளதாகவும், பின்னணியில் வட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் அவர் குற்றச்சாட்டு சாட்டியுள்ளார்.
முகவரி அலுவலர்கள் (BLO) மீது வட்டாட்சியர் நேரடியாக சென்று, “இனி சேரும் வாக்குகளை ‘Shifted’ என்று பதிவு செய்யுங்கள்” என வற்புறுத்தியதும், சிறப்புச் சேர்க்கைப் பணி இரவோடு இரவாக நிறைவு காணப்பட்டுள்ளது என்பதும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. சின்னாளபட்டி பகுதியில் மொத்த வாக்குகள் 21,800–22,000 வரை உள்ள நிலையில், இன்று சிறப்புச் சேர்க்கையில் குறைந்தது 16,800 வாக்குகள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளதாகவும், ஒட்டுப்பட்டியில் இருந்து கூட 60 வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளியர், தொழில் நிமித்தமாக வெளியூருக்கு சென்றவர்கள் மற்றும் கடைசி நாளில் சேர்க்கைக்காக வருபவர்கள் வாக்காளர் பட்டியலில் சேர முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மாநில அமைச்சர் பெரியசாமி மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் மீது தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வலியுறுத்தியுள்ளார்.















