தேர்தல் ஆணையத்தை அன்புமணி விலைக்கு வாங்கி, தனது உழைப்பால் வளர்ந்த கட்சியை பறித்துக் கொண்டதாக, பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டி உள்ளார்.
கடந்த சில மாதங்களாகவே பாமக நிறுவனர் ராமதாசுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு கட்சியை நிர்வாகிப்பதில் பெரும் போட்டி ஏற்பட்டது. இருவரும் போட்டி போட்டு நிர்வாகிகளை மாற்றி அமைத்தனர். அடுத்தகட்டமாக நீதிமன்றங்களை நாடியும் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை, இந்தசூழலில் தேர்தல் ஆணையம் பாமக தலைவராக அன்புமணியை அங்கீகரித்தது.
இந்நிலையில், கடலூர் மாவட்ட பாமக ஒருங்கிணைந்த பொதுகுழு கூட்டம், வடலூரில் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. அதில் உரையாற்றிய அவர், 46 ஆண்டுகளாக கடுமையாக உழைத்து, தன்னால் வளர்க்கப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சியை, பணபலத்தால் அன்புமணி கைப்பற்றியிருந்தாலும்கூட, நீதிமன்றத்தில் தனது உரிமை நிலைநாட்டப்படும் என்று கூறினார்.
















