அ.தி.மு.க.வில் உட்கட்சிப் பிரச்சினைகள் இருந்தாலும், தங்களது கூட்டணி பலமாக இருப்பதாக பி.ஜே.பி.மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, செங்கோட்டையன் வெளியேறியது உள்ளிட்ட சில பிரச்சனைகள் அதிமுகவில் இருக்கிறது. எனினும், தங்களது கூட்டணி பலம் வாய்ந்தது என்றார்.
தமிழகத்தின் நலனுக்காக டெல்லி சென்று பிரதமரை சந்திக்க இருப்பதாக கூறும் முதலமைச்சர் ஸ்டாலின், பிரதமர் தமிழகத்துக்கு வந்தபோது, ஏன் சந்திக்கவில்லை என்றும் தமிழிசை கேள்வி எழுப்பினார்.














