கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை போலீஸார் கைது செய்திருக்கின்றனர். இதில், ஒருவரை போலீஸார் சுட்டுப்பிடித்துள்ளனர்.
சிதம்பரம் அண்ணாமலை நகர் பகுதியில், கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளதாக வந்த புகாரை அடுத்து, தனிப்படை போலீஸார் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். இந்நிலையில், நவீன, அருள், கௌதம் என 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ஒரு கிலோ 100 கிராம் எடையிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதில். நவீனை கைது செய்த பிறகு, கஞ்சாவை பறிமுதல் செய்ய, மாரியப்பா நகர் என்ற இடத்திற்கு, போலீஸார் அழைத்து சென்றுள்ளனர். அப்போது, அய்யப்பன் என்ற போலீஸ்காரரை கத்தியால் தாக்கிவிட்டு, நவீன் தப்பியோட முயன்றதால், அவரை காவல் ஆய்வாளர் அம்பேத்கர் சுட்டுப்பிடித்துள்ளார். நவீன் மீது ஏற்கனவே, பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக, காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்தார்.














