திண்டுக்கல்லில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகள் இந்திரா வீட்டில், ஜி.எஸ்.டி. அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு சாலையில் சிங்காரக்கோட்டை அருகே, அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகள் இந்திராவுக்கு சொந்தமான நூற்பாலை உள்ளது. இந்நிறுவனத்தில் ஜி.எஸ்.டி முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகாரின்பேரில், திண்டுக்கல் சிவாஜி நகரில் உள்ள இந்திராவின் வீட்டில், கோவையைச் சேர்ந்த ஜி.எஸ்.டி. அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அமைச்சர் ஐ.பெரியசாமி, பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார், இந்திரா ஆகிய 3 பேரின் இல்லங்களிலும், அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, ஆவணங்களை கைப்பற்றி சென்றது குறிப்பிடத்தக்கது.
















