நடிகர் விஜய் நல்லது செய்வதற்காகவே அரசியலுக்கு வந்துள்ளார் என மக்கள் நம்பினால் அவர் வெற்றி பெறலாம் என நடிகை ரோஜா தெரிவித்துள்ளார்.
நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு, தமிழ் திரைப்படங்களில் நடிக்க தொடங்கியுள்ள ரோஜா, சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, சினிமாவில் இருந்து அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு, நடிகர் சிரஞ்சீவி தவறான எடுத்துக்காட்டாக விளங்கி விட்டார் எனக் கூறினார். அரசியலில் விஜயகாந்த் போன்று சிரஞ்சீவி செயல்படவில்லை. அவர் பொறுமை காத்திருந்தால் முதலமைச்சராக வந்திருக்கலாம் என்றும் தெரிவித்தார். அரசியல் பொதுக் கூட்டங்களுக்கு காவல்துறையை மட்டும் எதிர்பார்க்கக் கூடாது. கட்சியினரையும் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் நடிகை ரோஜா கேட்டுக்கொண்டார்.
















