பீஹார் சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளையும் மிஞ்சும் வெற்றி சதவீதத்தைப் பதிவுசெய்துள்ளது பாஜக. தேஜ கூட்டணியில் போட்டியிட்ட பாஜக, ஐக்கிய ஜனதாதளம், சிராக் பாஸ்வான் தலைமையிலான லோக்ஜன் சக்தி உள்ளிட்ட கட்சிகளில், பாஜக முன்னிலை தெளிவாகக் காணப்படுகிறது.
மொத்தம் 101 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக, 87 தொகுதிகளில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது. இதன்படி கட்சியின் வெற்றி விகிதம் 86% ஆக உயர்ந்துள்ளது. இந்தப் பேரவைப்பு, பீஹார் மாநில மக்களிடம் பிரதமர் மோடிக்கு உள்ள நம்பிக்கை மேலும் உறுதியானது என்பதை அரசியல் வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.
கூட்டணி கட்சியான ஜேடியு (ஐக்கிய ஜனதாதளம்) கூட சிறப்பான திறமையை வெளிப்படுத்தியுள்ளது. 101 தொகுதிகளில் போட்டியிட்ட இக்கட்சி 75 இடங்களில் முன்னிலை பெற்று, 74% வெற்றிச் சதவீதத்தைக் கிடைத்துள்ளது.
எதிரணியில் இருந்த லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடி, இந்த தேர்தலில் பெரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது. 143 தொகுதிகளில் களம் இறங்கிய கட்சி, 35 இடங்களில் மட்டுமே முன்னிலைப் பெற்று, வெறும் 24% வெற்றிச் சதவீதத்தில் சுருங்கியுள்ளது.
அதேபோல், காங்கிரஸும் கடுமையான இழப்புகளை எதிர்கொண்டுள்ளது. 61 தொகுதிகளில் போட்டியிட்ட இதற்கட்சி, 6 இடங்களில் மட்டுமே முன்னிலைப் பெற்று, 9% சதவீதத்தில் தள்ளாடுகிறது. கடந்த சட்டமன்றத்தில் 19 எம்.எல்.ஏ.க்கள் இருந்த காங்கிரஸ், இப்போது அதே பலத்தைக் கூட தக்க வைத்துக் கொள்ள முடியாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய தரவுகள் (கட்சி – போட்டி – முன்னிலை – வெற்றி %):
பாஜக – 101 – 87 – 86%
ஜேடியு – 101 – 75 – 74%
ஆர்ஜேடி – 143 – 35 – 24%
காங்கிரஸ் – 61 – 6 – 9%
பீஹாரின் அரசியல் சமநிலையை மாற்றும் வகையில் இந்தத் தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன. குறிப்பாக பாஜக மற்றும் ஜேடியுவின் வலுவான முன்னிலை, எதிர்கட்சிகளுக்கு பெரிய பின்னடைவாகும்.



















