தமிழகத்தின் நாட்டுப்புறக் கலைகளை உலகம் முழுவதும் கலைஞர்கள் கொண்டு செல்ல வேண்டும் என்றும் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் தமிழ்நாடு அரசு இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகத்தில் சென்ற கல்வியாண்டில் நாட்டுப்புறக் கலையில் ஓராண்டு பயிற்சி முடித்த மாணவர்களுக்கு தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சான்றிதழ்களை வழங்கிப் பேசினார்.
அப்போது, தமிழக அரசால் நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருவதாகக் கூறினார். தமிழ்நாடு மட்டுமின்றி உலகெங்கும் தமிழ் கலைகளை எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் அவர்களை அமைச்சர் கேட்டுக் கொண்டார்.


















