பீஹாரில் துணை முதல்வர் கார் மீது ராஷ்ட்ரீய ஜனதா தளம் தொண்டர்கள் கற்களையும், செருப்பையும் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பிஜேபி-யை சேர்ந்த துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹா போட்டியிடும் லக்கிசாராய் தொகுதியிலும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு நிலவரங்களை அவர் காரில் சென்று பார்வையிட்டு வந்தார்.
கோரியாரி கிராமத்திற்கு வந்த போது அவரை சூழ்ந்து கொண்ட ராஷ்ட்ரீய ஜனதா தள தொண்டர்கள், கார் மீது தாக்குதல் நடத்தினர். செருப்புகளையும், கற்களையும் வீசிய அவர்கள், ‘முர்தாபாத்’ என கோஷம் போட்டு கிராமத்துக்குள் நுழைய விடாமல் தடுத்தனர். இதனையடுத்து அந்த இடத்துக்கு போலீசார் விரைந்து நிலமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆட்சிக்கு வருவதற்கு முன்பே ஆர்ஜேடி தொண்டர்கள் அராஜகத்தில் ஈடுபடத் தொடங்கிவிட்டதாக, விஜய்குமார் சின்ஹா குற்றம்சாட்டியுள்ளார்.

















