தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் கடலூரில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மொத்தம் 22 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டள்ளன.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் தலைவர் வேல்முருகன், தமிழீழ படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த, மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
சாதிவாரி கணக்கெடுப்பு உடனடியாக நடத்தப்பட வேண்டும். இது நடக்காவிட்டால், திமுக கூட்டணியில் தொடர்வதா? இல்லையா? என்பது குறித்து, முடிவு எடுக்கப்படும் என்றும் வேல்முருகன் குறிப்பிட்டார்.
 
			

















