“மோன்தா” புயலால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள, அரசு தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை எழிலகத்தில் உள்ள மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், “மோன்தா” புயலால் பாதிக்கப்படும் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.
நீர்தேக்கங்களில் உள்ள நீர் இருப்பு கண்காணிக்கப்பட்டு வருவதாக கூறிய அவர், தேவைப்படும் நேரங்களில் தண்ணீரை திறந்து விட, முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தமிழ்நாட்டில் புயலால் பெரிய பாதிப்பு இருக்காது. அதே நேரத்தில் மழை அதிகமாக இருக்கும் என்றும், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் கூறினார்.
 
			

















