தேசிய ஜனநாயக கூட்டணியில் த.வெ.க இணைந்தால், தமிழகத்தில் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும் என புதிய நீதி கட்சி தலைவர் ஏசி சண்முகம் தெரிவித்துள்ளார்.
மருது சகோதரர்களின் 224 ஆவது நினைவு நாளை முன்னிட்டு சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள, அவர்களது சிலைக்கு ஏ.சி சண்முகம் மரியாதை செலுத்தினார்.
அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2026 சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் தங்களது கட்சி இடம்பெறும் எனக் கூறினார். அதிமுகவில் பிரிந்தவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தால் மட்டுமே அக்கட்சி பலமாக திகழும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
			















