அமெரிக்கா ரஷ்யாவின் எதிரியாக இருப்பதாகவும், ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களுக்காக அமெரிக்கா விதித்த பொருளாதார தடைகள் போர் நடவடிக்கை என்று ரஷ்யா கூறியுள்ளது.
உக்ரைனுடன் ரஷ்யாவின் போர் நான்காவது ஆண்டில் நுழைவதற்கிடையில், அமெரிக்கா ரோஸ்நெப்ட் மற்றும் லுகோயில் போன்ற ரஷ்யாவின் முக்கிய எண்ணெய் நிறுவனங்களுக்கு தடைகள் விதித்துள்ளது. இதுவரை ரஷ்யாவுக்கு எதிராக இத்தகைய தடைகள் அமெரிக்கா அறிவிப்பது இதுவே முதல் முறையாகும்.
இது குறித்து ரஷ்யாவின் பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவர் டிமிட்ரி மெட்வெடேவ் தெரிவித்திருப்பது: “அமெரிக்கா எங்கள் எதிரி. ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு எதிராக பொருளாதார தடைகள் போர் நடவடிக்கையாகும். உக்ரைனும் ரஷ்யாவும் இடையிலான மோதலின் காரணங்களை தீர்க்க வேண்டும். தற்போதைய தடைகள் உக்ரைனில் நிலையான சமாதானத்தை உருவாக்க உதவாது” என கூறியுள்ளார்.
மேலும் அவர், “சமாதானத்தை உருவாக்க முயற்சிப்பவர் டிரம்ப். அமெரிக்கா, ஏமாற்றப்பட்ட ஐரோப்பாவுடன் சேர்ந்து, ரஷ்யாவை கட்டுப்படுத்த நோக்கமிட்டுள்ளது” என்றும் தெரிவித்துள்ளார்.
 
			















