2025-ஆம் ஆண்டிற்கான வைக்கம் விருது அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த தேன்மொழி சௌந்தரராஜனுக்கு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
எல்லை கடந்து சென்று சமூக நீதிக்காக வைக்கத்தில் போராடிய தந்தை பெரியாரை நினைவு கூறும் வகையில், பிற மாநிலங்களில் ஒடுக்கப்பட்டவர்கள் நலனுக்காக பாடுபட்டு, குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்துபவர்களுக்கு, ஆண்டு தோறும் வைக்கம் விருது வழங்கப்படுகிறது. அதன்படி, 2025 ஆம் ஆண்டுக்கான வைக்கம் விருது, தேன்மொழி சௌந்தரராஜனுக்கு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. சமூக நீதி நாளான செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி, இந்த விருது வழங்கப்பட உள்ளது. தேன்மொழ¤ சௌந்தராஜனுக்கு 5 லட்சம் ரூபாய்க்கான காசோலை, பாராட்டு சான்றிதழ் மற்றும் தங்கம்முலாம் பூசிய பதக்கம் ஆகியவை, முதலமைச்சரால் வழங்கப்பட உள்ளது.
அமெரிக்காவில் வசித்து வரும் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த தேன்மொழி, இந்திய-அமெரிக்க ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உரிமைகளுக்காக தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். அவரது சேவையை பாராட்டும் வகையில், தமிழக அரசு சார்பில் வைக்கம் விருது வழங்கி, கௌரவிக்கப்பட உள்ளது.
 
			

















