கொசஸ்தலை ஆறு மற்றும் புழல் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் கால்வாய்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக சென்னை மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
சென்னை இராயபுரத்தில் வடகிழக்கு பருவமழையையொட்டி வடசென்னை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆலோசனை நடத்தினர்.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மேயர் பிரியா மண்டலம் 5, 9 ஆகிய பகுதிகளில் மீட்பு முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக கூறினார். சுரங்க பாதைகள் சீரமைக்கப்பட்டு, சென்சார் மற்றும் கேமரா மூலமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
 
			















