வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்படாது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்த நிலையில், பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை 5:30 மணிக்கு தென் மேற்கு வங்கக்கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு உருவானது. முன்னாள் எச்சரிக்கையில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து வட மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளுக்கு சென்றடையலாம் என கூறப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது வானிலை மையம் அந்த எச்சரிக்கையை திரும்பப் பெற்றுக்கொண்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு, மண்டலமாக வலுப்படாமல் வடமேற்கு திசையில் நகர்ந்து, 24 மணி நேரத்தில் வட மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திராவை தாக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
















