திருப்பூர்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்த இளம் பெண் ஒருவர், தாராபுரத்தில் வாடகை வீட்டில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தகவலின்படி, வேடசந்தூரைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் பனியன் தொழிலாளி. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அங்காள ஈஸ்வரியுடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஆறு மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், குழந்தை பிறந்த சில மாதங்களிலேயே உடல்நலக் குறைவால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இந்த துயரத்தை தாங்க முடியாமல் மனஅழுத்தத்தில் இருந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ரமேஷ் தம்பதியர், வேடசந்தூரிலிருந்து திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகிலுள்ள தளவாய்பட்டினம் பகுதியில் குடியேறி வாழ்ந்து வந்தனர்.
சம்பவம் நடந்த தினம், ரமேஷ் வழக்கம்போல் தொழிற்சாலைக்கு சென்றிருந்தார். அந்த நேரத்தில் வீட்டில் தனியாக இருந்த அங்காள ஈஸ்வரி, திடீரென தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதை கவனித்த அண்டை வீட்டார் உடனடியாக மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். ஆனால், மருத்துவர்கள் உயிரிழந்துவிட்டதாக கூறினர்.
தாராபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், திருமணமாகி மூன்று ஆண்டுகள் மட்டுமே ஆனதால், ஆர்.டி.ஓ. பெலிக்ஸ் ராஜா சம்பவம் குறித்து தனி விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த துயரச் சம்பவம் தாராபுரம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது